Sunday 23 July 2017

அசலுக்கு ஆபத்தில்லா திட்டங்கள் (Capital Protection orientated Funds - CPOF)

Click here to read the same article in pdf format which was published in Namathu chettinad tamil magazine.

Those who are interested can Click here to access the original excel file which has the example for CPOF.

தொடர்ந்து படித்து வரும் வாசகர்களுக்கு நன்றி!
தொடர்புகொண்டவர்களுக்கு கூடுதல் நன்றி!!

அடியேன் அறிந்து கொண்டது, ஆச்சிகளும் ஆர்வத்தோடு தொடர்ந்து படித்தும், பேசியும் வருகிறார்கள். மகள் கலியாணத்திற்க்கு சேர்க்க வேண்டும் என்ற எண்ணம், மேலோங்கிறது புரிகிறது. கட்டுரைகளின் நோக்கம் நிறைவேறும் என்ற அறிகுறி தென்படுகிறது. ஆனாலும் என்ன  நோக்கம்
சேமிப்பாக மாறாமலே இருப்பதாக தோன்றுகிறது. காரணம்? ஆச்சி சொன்னால், செட்டியார் கேட்பதில்லை இன்னும் சிலர் இருக்கிறார்கள் போலும்! செட்டியார் சொன்னால் ஆச்சி கேட்பதில்லை!! ஆக எண்ணம் சேமிப்பாக மாறாமலே தடைபட்டுவிடுகின்றது. தடைக்கான காரணங்களை, அவர்கள் வாயாலே அறிந்து கொண்டேன். சரியான விளக்கம், தெளிவான புரிதல் இருந்தால், தடை விலகலாம், மகள் கலியாணத்திற்க்கு சேர்க்க சேமிப்பு தொடங்கலாம், என்றே இந்த கட்டுரை!! மேலே படியுங்கள்…

நான் புரிந்துகொண்டவரை, பரஸ்பர நிதி திட்டங்களின் வருமானம் சந்தையை ஒட்டியே இருப்தால் அசலுக்கு மோசம் வந்துவிடுமோ என்ற அச்சமே பலருக்கும் மேலோங்குவதாக புலப்படுகின்றது. இந்த முன்ஜாக்கிரதை முத்தாட்ச்சிகளுக்கு ( முத்தணாவை, முத்தாட்ச்சியாக்கிவிட்டேன்) என்றே சில சிறப்பு பரஸ்பர நிதி திட்டங்கள் உள்ளன. Capital Protection orientated Fund (CPOF) என்பது, பெரும்பாலும் அசலுக்கு மோசமில்லை, வகையான திட்டம்தான்! இங்கு பரஸ்பர நிதி பற்றி தெரிந்தவர்களுக்கு, ஒரு கேள்வி எழலாம். அரசாங்கத்தின் SEBI ( Security exchange board of India) சட்ட திட்டங்களின் படி, எந்த பரஸ்பர நிதி நிறுவனமும், எந்த திட்டத்திற்கும் உத்தரவாதம் ( Guarantee/Warranty ) தருவது எளிதில் சாத்தியமல்ல. அப்புறம் எப்படி அசலுக்கு மோசமில்லை? பொறுங்கள்… அதன் தாத்பரியத்தை விளக்குகின்றேன்.

நீங்கள், உங்களது ரூ 100 ஐ இந்த CPOF திட்டத்தில் பொது வெளியீட்டில், ( New Fund offer - NFO) முதலீடு செய்கறீர்கள். அந்த நிதி நிறுவனம், ரூ 100 ஐ , இரண்டு பகுதிகளாக பிரித்துகொள்வார்கள். முதல் பகுதி, A என்பது ரூ 80 முதல் ரூ 85. எனவே, மிச்ச இரண்டாவது, பகுதி B என்பது ரூ 20 முதல் ரூ15. இந்த முதல் A பகுதியை, அரசாங்க பத்திரங்கள், மற்றும் திட்ட மேலாளருக்கு நம்பிக்கை தரகூடிய, Risk குறைவான, AAA கடன் பத்திரங்களில் பெரும்பாலும் முதலீடு செய்வார்கள். இது சுமார் 5% முதல் 9% வரை லாப விகிதம் தரும் என்று எதிர்பார்கலாம். ஆக நமது பகுதி A , 3 அல்லது 4 வருடங்களில் ரூ 100 ஆகிவிடும். அப்பாடா அசல் கிடைத்துவிட்டது!! என்ன, ரூ 100 கொடுத்து ரூ 100 வாங்குவது, பெரிய கம்பசூத்திரமா? இது எதுக்கு எங்களுக்கு, என்ற எண்ணமா? சற்றே பொறுங்கள்… “பொறுத்தார் பூமி ஆழ்வார்”…. நான் இன்னும் முடிக்கவில்லை..

இரண்டாவது பகுதி B இருக்கின்றதே அதை நல்ல தேர்ந்தெடுத்த பங்குகளில் முதலீடு செய்வார்கள். இந்த முதலீடு சந்தையின் ஆதிக்கத்தில் லாபமோ, நஷ்டோமோ தரலாம். எருது சந்தையில் ( Bull market) நமது B பகுதியான , கூடிபகுதி, போட்டதற்கு மேல் கூட கிடைக்கலாம், அல்லது, அலைபாயும் சந்தையில் ( listless trade), போட்டது போட்டபடி கிடக்கலாம், அல்லது நமக்கும், நம்மோடு சேர்ந்த முதலீட்டாளர்களுக்கும் நேரம் சரியில்லையெனில், கரடி சந்தையில் ( Bear Market) போட்டதற்கு கிழ் கிடைக்கலாம். ஆக A பகுதியில் கிடைத்த நூறோடுநூறோ, , அதனுடன் B பகுதியில் அதற்கு மேலோ கிடைத்த தொகையும் சேரத்து திட்ட முடிவில் தருவார்கள். இந்த திட்டத்தின் தாத்பரியம் புரிந்துவிட்டால், ஒன்று தெளிவாக தெரிந்திருக்கும். இத்திட்டத்தின் பலனை சரியான முறையில் பெற, 3 - 4 வருடங்கள், திட்டத்தில் இருக்க வேண்டும். எனவே இந்த திட்டங்கள் எல்லாம், Close ended Funds என்ற திட்ட வகையை சார்ந்தவை. முதலீட்டை திட்ட முடிவில் மட்டுமே எடுக்க முடியும். இப்பொழுது படத்தை பாருங்கள், தெளிவாகும்..

இப்போது அடுத்த படத்தை பாருங்கள், கடந்த பத்து வருட இடைவெளியில், ஒவ்வொரு 3.5 ஆண்டுகள் இடைவெளியில், பங்கு ( 20% of B @17.6% Return ) மற்றும் கடன் (80% A @ 7.9% Return) சராசரியாக எவ்வளவு லாபவிகிதம் தந்தது என்ற விபரம் உள்ளது. இதை வைத்து , இந்த திட்டதின் லாபவிகிதம் கணக்கிட்டால் 10% லாபவிகிதம் வருகிறது. அட்டவணை பார்கவும். இது மாதிரியே, நம்க்கு கிடைக்கும் லாபவிகிதம் சந்தையை பொறுத்து மாறும்.


ஆக…

  1. எருது சந்தையில், நமக்கு லாபம், வங்கி நிரந்தர வைப்பு வட்டியை விட கூட.
  2. அலைபாயும் சந்தையில் வங்கி நிரந்தர வைப்பு வட்டியை ஒட்டி.
  3. கரடி சந்தையில் வங்கி சேமிப்பு வட்டி மாதிரி கிடைக்க வாய்புகள் இருக்கின்றது.அசலுக்கு மோச வாய்புகள் மிக மிக குறைவு.

பரஸ்பர நிதி நிறவனங்கள், முதலீட்டாளர்களை ஏமாற்றிவிட்டு, அசலோடு ஓடியதாக எனக்கு தெரிந்து இல்லை… லாபம் முன்னே பின்னே வரலாம்.

என்ன ஆச்சிகளே சந்தேகம் தீர்ந்ததா? தடைகள் விலகியதா? அச்சத்தோடு பரஸ்பர நிதி தொடங்க எண்ணுபவர்களுக்கு ஏற்ற திட்டம் இது. முதலில் இதில் (CPOF) தொடங்கி, பின்னர் சரிவிகித திட்டத்திற்கு ( Balanced) மாறி, அனுபவ முதிர்ச்சி பெறும் போது பங்கு ( Equity) திட்டதிற்கு போகலாம்.

இன்னும் என்ன தயக்கம்… முதல் அடியை எடுத்து வையுங்கள்! பயந்துகொண்டு காத்திருப்பதில் அர்த்தம் இல்லை. தொடங்குகள், வாழ்த்துக்கள்!!

இதுபோல் பலருக்கு சந்தேகங்கள் இருக்லாம்… எழுதுங்கள், முடிந்தவரை விளக்குகின்றேன். 

No comments:

Post a Comment