Tuesday 20 February 2018

பிஎன்பி ( Punjab National Bank) முறைகேடுகள் - முதலீட்டாளர்களுக்கு தந்த பாடங்கள்

பிஎன்பி முறைகேடுகள் பதினோராயிரம் கோடி ( 11000 0000000). எத்தனை சைபர்கள் என்று என்ன முடியாதபடி, முறைகேடுகள், ஊழல்கள்.  இதற்கு நடுவில் நாம் நியாயமாக முதலீடு செய்து லாபம் பெற வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம்.  பிஎன்பி, வங்கி முறைகேடுகள் பற்றி அறிந்து இருப்பீர்கள். அறியாதவர்களுக்கு ஒரு குறுந்தகவல், நாட்டின் இரண்டாவது பெரிய  அரசு வங்கியில் முறைகேடுகள் என்று தகவல். தற்சமயம் சி.பி.ஐ விசாரணை  நடந்து வருகின்றது. தற்போதைய தகவல் படி முறைகேடுகளின் அளவு பதினோராயிரம் கோடி, அதற்கு மேலும் போகலாம். இது என்ன வகையான முறைகேடு? யார்யார் சம்பந்தப்பட்டுள்ளார்கள்? எப்படி நடந்தது? என்று விளக்குவது இல்லை இந்தக் கட்டுரை! ஆனால் இதுபோன்ற, அதில் துளியும் சம்பந்தம் இல்லாத நம்மைப் போன்ற முதலீட்டாளர்கள் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்று பார்ப்பதே இந்த கட்டுரையின் நோக்கம்.



முதல் பாடம்

இந்த முறைகேடுகளால் முதலீட்டாளர்களுக்கு அதாவது பங்கில் நேரடியாக முதலீடு செய்பவர்களுக்கும், மற்றும் மியூச்சுவல் பண்ட்  மூலம் முதலீடு செய்பவர்களையும் எப்படி பாதிக்கிறது என்று பார்ப்போம். நாங்கள் அடிக்கடி சொல்வதுண்டு நேரடி பங்கு முதலீட்டில் அதிகம் ரிஸ்க் என்றும் மியூச்சுவல் பண்ட் பங்கு முதலீட்டில் ரிஸ்க் குறைவு என்றும், இது இப்போது உறுதி செய்யபடுகின்றது.   உதாரணமாக நீங்கள் சுமார் ஒரு லட்சம் ரூபாயை முறைகேடு தகவலுக்கு முன் பிஎன்பி  ல் முதலீடு செய்திருந்தால் அது இன்றைய தேதியில் 22.3% சதவிகிதம் குறைந்து 77,000 ஆயிரமாக இருக்கும். அதேசமயம் ஒரு டைவர்ஸிபைடு மியூச்சுவல் பண்டில் ( Diversified equity mutual fund)  முதலீடு செய்திருந்தால் இவ்வளவு குறைந்து இருக்காது, லார்ஸ் கேப் திட்டங்கள்  சராசரியாக -0.28% குறைந்துள்ளது காரணம் எந்தவொரு மியூட்சுவல் பன்ட்  திட்டமும் தனிப்பட்ட பங்குகளில் ஐந்து சதவீதத்திற்கு மேல் முதலீடு  செய்வது இல்லை. எனவே நேரடி பங்கு முதலீட்டில் ரிஸ்க் அதிகம். இது போன்ற முறைகேடு வரும்போது அந்த பங்கில் முதலீடு செய்த அனைவரும் அதிகபட்சம் பாதிக்கப் படுகிறார்கள். ஹச் டி எப் சி புருடென்ஸ் திட்டம் பி என்பி பங்கில் வேல்யூ ரிசர்ச் தகவல்படி,  ஐனவரியில் 728 கோடி, அதாவது, அதன் மொத்த முதலீட்டில் 1.85% வைத்திருத்த்து. இதனால் இந்த திட்டத்தின் பாதிப்பு நேரடி பங்கு முதலீட்டை விட நிச்சியம் குறைவாகவே இருக்கும்.

இந்த பிஎன்பி முறைகேடுகளால் பிஎன்பி மட்டும் பாதிக்கபடுவதில்லை, இந்த முறைகேட்டுடன் தொடர்புடைய மற்ற வங்கிகளும், நிறுவனங்களும் பாதிக்கப்படுகிறது. உதாரணமாக அலகாபாத் வங்கி, யூனியன் வங்கி, ஆக்சிஸ் வங்கி, எஸ் பி ஐ வங்கி, கீதாஞ்சலி ஜெம்ஸ் என்று பல நிறுவனங்கள  இதனுடன தொடர்பு கொண்டவை என்று சில தகவல்கள் கசிந்தவண்ணம் உள்ளது. இது போன்ற நேரங்களில் அந்தந்த பங்குகளின் விலை குறைய வாய்ப்புகள் உள்ளது.

பங்கு
12/02/18
16/02/18
வித்தியாசம்
சதவிகித மாற்றம்
கீதாஞ்சலி ஜெம்ஸ்
62.85
37.55
-25.3
-40.3%
பி என்பி வங்கி
161.65
125.65
-36
-22.3%
அலகாபாத் வங்கி,
61
54.75
-6.25
-10.2%
யூனியன் வங்கி
127.5
118.3
-9.2
-7.2%
எஸ் பி வங்கி
288
271.75
-16.25
-5.6%
ஆக்சிஸ் வங்கி
562
537
-25
-4.4%
பி எஸ்   வங்கி
29080
28396
-684
-2.4%
பி எஸ் சென்செக்ஸ்
34292
34016
-276
-0.8%

இரண்டாவது பாடம்

நாம் நமது நேரடி முதலீடுகளில் இந்த நிறுவனங்களில் குறிப்பாக வங்கிகளில்  முதலீடு செய்திருந்தால் நமது முதலீட்டுக்கு பாதிப்புகள் அதிகம் இருக்கும். இந்த முறைகேட்டால் வங்கி சார்ந்த முதலீடு அல்லது வங்கி சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் நஷ்டம் அதிகமாக இருக்க வாய்புகள் உள்ளது. எனவே இந்த முறைகேடுகள் கற்றுத்தரும் இரண்டாவது பாடம் நாங்கள் முன்னர்  சொல்வது போல்  டைவர்ஸிபைடு மியூச்சுவல் பண்டு திட்டங்களை விட அதிக ரிஸ்க் வாய்ந்தது செக்டார் பண்டு ( sector funds)  எனப்படும் இந்த வங்கி சார்ந்த திட்டங்கள் ஆகும். எனவே ரிஸ்க் அதிகம் விரும்பாதவர்கள் பரந்த பங்கு முதலீட்டு திட்டங்களில் ( Diversified equity schemes) முதலீடு செய்ய வேண்டும். இது போன்ற குறிப்பிட்ட வங்கி திட்டங்களில் முதலீடு செய்பவர்கள் அதன் ரிஸ்க் தன்மையை உணரந்து  முதலீடு செய்ய வேண்டும் என்று இந்த பிஎன்பி முறைகேடு கற்றுத்தரும்  பாடம்.

மியூச்சுவல் பண்ட திட்டங்களில் கடந்த ஒரு வாரத்தில் சதவிகித சரிவு
நிப்டி பி எஸ் யூ வங்கி
-2.49%
Nifty PSU bank index
பி எஸ்   வங்கி
-2.40%
BSE bankex
வங்கி திட்ட சராசரி
-1.41%
Mutual fund banking sector funds
நிப்டி வங்கி
-1.02%
Nifty bank index
பி எஸ் சென்செக்ஸ்
-0.84%
BSE Sensex
நிதி நிறுவன திட்ட சராசரி
-0.62%
Mutual fund Financial  sector funds
மல்டி கேப் திட்ட சராசரி
-0.37%
Mutual fund Multi cap equity funds
லார்ஸ் கேப் திட்ட சராசரி
-0.28%
Mutual fund Large cap equity funds

மூன்றாவது பாடம் 

மேலும் பி என்பி யின் நிதி நிலமை குறியீடு வருங்காலங்களில், இந்த முறைகேட்டால் மாற்றபடலாம் ( credit rating)  - இதனால் இந்த வங்கி விநியோகித்துள்ள கடன் பத்திரங்களின் ( bonds issued by PNB) விலை குறையும் அபாயமும் உள்ளது. இதனால் இந்த கடன் பத்திரங்களில் முதலீடு செய்துள்ள மியூச்சுவல் பண்டு  திட்டங்களின் என்.எ.வி குறைய வாய்புகள் உள்ளது. யூ டி ஐ ஷார்ட் டேர்ம் திட்டம் (UTI Short term Plan)  பி என்பி கடன் பத்திரங்களில்  255 கோடி, அதாவது, அதன் மொத்த முதலீட்டில் 2.47% ஐனவரியில் வைத்திருத்த்து.

நாலவது பாடம் 

பங்குகள், பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு முதலீடுகள் என்பது கப்பலில்  பயணிப்பது போன்றது. முறைகேடு போன்ற சூறாவளிகளும்,  பணம் விழுங்கும் திமிங்கலங்கழளையும் எதிர்கொண்டே ஆக வேண்டும். திமிங்கலங்கள் இல்லாத கடல்கள் இல்லை. அது இல்லாத கடலில் பயணித்து அக்கரை செல்வது என்பது லாபம் தரும் விஷயமாகவும் இல்லை. எனவே எந்த கப்பலில் எந்த வழியில் சென்றால் சூறாவளியும் திமிங்கலங்களும் இல்லாமல் லாபம் பெறலாம் என்று பார்ப்பது நம் கவனமாக இருக்க வேண்டும். அதே சமயம் நாம் நன்கு கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் பங்குகள். பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு முதலீடுகளைச் செய்யும்போது இதுபோன்ற முரண்பாடு சூறாவளி களையும் திமிங்கலங்களையும் எதிர் நோக்கித்தான் ஆக வேண்டும் இதுவே நிதர்சனம்.

சத்தியம் (Sify) நிறுவணத்தின் முரண்பாடுகளின் போது நிறைய கேள்விகள், நிறைய பதில்கள். அப்போது இதை முற்றிலும் தடுத்துவிட முடியுமா என்று பல ஆலோசனைகள். பெரிய முறைகேடுகளை குறக்க முடியுமே தவிர முற்றிலுமாக தவிர்க்க முடியுமா என்பது கேள்விக் குறியே. வரும் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

இப்போது நாம் எதை எதிர்பார்க்கலாம்? 
  • வங்கிகள் தங்களது கொடுக்கல் வாங்கலில் புது கட்டுபாடுகளை  கொண்டுவருவார்கள் 
  • இதுபோன்ற பரிமாற்றங்களை நுட்பமாக ஆராய்ந்து வழி நடத்துவார்கள். 
எனவே இதுபோன்ற முறைகேடுகள் இனிமேல் குறைக்கப்படலாம், தவிர்க்கப்படும் ஆனால் முறைகேடு வேறு ரூபத்தில் வேறு ஒரு நிறுவனத்தில் வேறு ஒரு சமயத்தில் வராது என்று எப்படி இப்போது சொல்ல முடியும்.  முடிந்தவரை முறைகேடுகளில் பணம் பறி போகாமல் முதலீடு செய்ய முயலுவோம்!


Find the links below to read more:


No comments:

Post a Comment