Thursday 8 March 2018

Single Sign On - ஒற்றை அடையாளத்தில் நிதி விபரம்

மியூச்சுவல் ஃபண்ட் பரிமாற்றம் எளிதாக - தகவல் தொழில் நுட்பத்தின் வாயிலாக

தகவல் தொழில் நுட்ப இந்தியா, மத்திய அரசாங்கத்தின் முன்னுரிமை திட்டங்களில் ஒன்று நாம் இந்த புது ஆண்டில்(2018) தகவல் தொழில்நுட்பத்தை மியூச்சுவல் பண்ட்களில் எவ்வாறு எளிமையாக பயன்படுத்தலாம் என்று பார்ப்போமா..

இணையத்தில் இருந்து நிதி தகவல்களை பெறுவதற்கு பல்வேறு முறைகளும் நிலைகளும் உள்ளன. அவற்றில் முக்கியமான முதலீட்டாளர்களின் தேவைகள் இதோ… 
1) பண மதிப்பு விவரம் 
2) யூனிட்டுகளின் பரிமாற்று  விவரம்
3) நிதி அல்லாத விவரங்கள் (உதாரணமாக மின் அஞ்சல் முகவரி, பான் நம்பர்  (PAN)  ஆகும்). 

இந்த மூன்று வெவ்வேறு வகையான செயல்களை செய்ய, தகவல்களை அறிய பல விதமான முறைகள் நிதி தகவல் தொழில்நுட்பத்தில் உள்ளது. சில வழிமுறைகளில் சில செயல்களை மட்டுமே செய்யமுடியும். எந்தெந்த வழிமுறைகளில் எந்தெந்த செயல்களை செய்யலாம், செய்ய முடியாது, தவிர்க்க வேண்டும் என்று அறிந்துகொள்வது அவசியம் தானே!! முதல் எந்தெந்த வழிமுறைகள் இருக்கு என்பதை பார்த்து விடுவோம். இவற்றை அதன் அடிப்படை தத்துவங்களை வைத்து பிரிக்கலாம் மற்றும்  அது செயல்படும் கருவிகளை வைத்தும் பிரிக்கலாம். ஒவ்வொன்றிலும் நமது எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும் விதம் மாறிக்கொண்டே இருக்கும். நமக்கு பிடித்த, நம்மால் செய்யமுடிந்த, நல்ல வழிமுறையை நாம் தேர்வுசெய்ய வேண்டும். தத்துவார்த்தமான முறையில் இரண்டு வகை தொழில்நுட்பங்கள் உள்ளது. ஒன்று புஷ்(தள்ளு) (PUSH technology)  இன்னோன்று புல் (இழு ) (PULL technology). இது என்ன இழு பறி விளையாட்டு என்று பார்க்கிறீர்களா? ஆங்கில பெயர்கள் எல்லாம் அப்படி தான்!! ஏற்றுக்கொள்ளுங்கள்.. பேர் எப்படி இருந்தால் என்ன, தத்துவத்தை (concept) புரிந்துகொண்டு நமக்கு ஏற்றதாக இருந்தால் நன்கு உபயோக படுத்துவோமே!

தள்ளு  - PUSH TECHNOLOGY
புஷ்-யில் (PUSH technology)  நீங்கள் விரும்புகிறீர்களோ இல்லையோ விவரம் உங்களை தேடி வரும். பெரும்பாலும் குறிப்பிட்ட முறையிலான தாக்கல் குறிப்பிட்ட தேதிகளில், தங்களை வந்து சேரும். உங்களது ஆத்திர அவசரத்துக்கு எல்லாம் அது கிடைக்காது. உதாரணம், என்.எஸ்.டி.எல் தகவல் அறிக்கை  (NSDL CAS Report , NSDL’s Consolidated Account Statement) இது பிரதி மாதமும் இரண்டாவது வார ஆரம்பத்தில் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும். இப்போதும் நீங்கள் நிதி சார்ந்த முதலீடு செய்து இருந்தால் இது வந்துகொண்டு தான் இருக்கும். மின் அஞ்சல் முகவரி கொடுத்திருந்தால்/பதிந்திருந்தால் கிடைக்கும். இது பொதுவாக நிறைய முதலீட்டாளர்களுக்கு தெரிய வில்லை. உங்கள் மின்னஞ்சல் இன் பாக்ஸ் (INBOX)  அல்லது ஐங் பாக்ஸ் (JUNK BOX) யில் , என் எஸ் டி எல் ( NSDL CAS) என்று தேடி பார்க்கவும்.. கிடைத்ததா?? இதன் திறவுகோல் உங்கள் (PAN) பான் நம்பர் தான்.

இதில் அடக்கம், முந்தய முடிந்த மாத தேதியில் உங்கள் பங்கு , பரஸ்பர நிதிகள் மதிப்பு மற்றும் அந்த ஒரு மாதத்தில் செய்த அணைத்து நிதி பரிமாற்றமும் , அதாவது பங்கு மற்றும் பரஸ்பர நிதிகளில் செய்த பரிமாற்றங்கள் இங்கே தரப்பட்டு இருக்கும். உங்களுது  காப்பீடு  விபரமும் இ முறையில் (insurance electronic form) இருந்தால் அதன் விவரமும் இதில் சேர்த்து தரப்படும். இந்த தகவலை பெறுவதற்கு நீங்கள் எதுவும் செய்யவேண்டியதில்லை. உங்கள் மின்னஞ்சல் , (PAN) பான் நம்பர் மட்டும் நீங்கள் முதலீடு செய்துள்ள எல்லா  நிறுவனத்திலும் இருக்க வேண்டும். இந்த என்.எஸ்.டி.எல் தகவல் அறிக்கை (NSDL CAS ரிப்போர்ட்டை) உபயோகப்படுத்துங்கள். அந்த மாதத்தின் சொத்து மதிப்பு விவரம் மற்றும் கடந்த 12 மாத சொத்து மதிப்பு விவரத்தை பல வண்ணங்களில் பார் கிராப் (Bar Graph) ஆக சித்திர வடிவிலும் பல வண்ணங்களோடு எளிதில் புரியும் படி தகவல் தர வல்லது. இதில் எல்லாமே செளககரியம் தானே என்று என்னவும் வேண்டாம். சில அசைவுகரியங்களும் உள்ளது. நமக்கு தேவை பட்ட தேதியில் இது கிடைக்காது. உதாரணமாக மாதத்தின் 20 ஆம் தேதி ஒரு அவசர தேவைக்காக பணம் எடுக்க நினைக்கும் போது அன்றைய மதிப்பு தெரிய வாய்ப்பில்லை. மேலும் 9 ஆம் தேதி கிடைக்கும் இந்த தகவல் ரிப்போர்ட்டில் அதற்கு முந்தைய மாதத்தின் மதிப்பு தான் இருக்கும். 9 ஆம் தேதியின் மதிப்பு இருக்காது. இந்த தடங்கல்களை தாண்டி வர கைகொடுப்பதே PULL technology. இதிலும் சில பல வழிமுறைகள் உள்ளன. அவற்றை பாப்போம்.

இழு - PULL TECHNOLOGY
இந்த PULL technology யில் நாம் விரும்பிய தேதியில் உதாரணமாக 20ஆம் தேதியில் அந்தந்த நிதி நிறுவன இணையதளத்திற்கு சென்று மெயில் பேக்  (Mail back report) சேவை மூலம், வேண்டிய தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். இந்த மெயில் பேக்  (Mail back report ) சேவையில் பல தகவல்கள் உங்களுக்கு தேவையான, முன்னரே குறிப்பிடப்பட்ட வடிவத்தில் இருக்கும். உதாரணம், லாபம் வந்த விவரம் (Dividend) , யூனிட் விற்று வாங்கி மாற்றிய விவரம், உங்களுக்கு அந்தந்த நிதி ஆண்டில் கிடைத்த லாப நஷ்ட விவரம் (Capital Gain), என்று பலதரப்பட்ட தேவைகளுக்கு ஏற்றவாறு தகவல்கள் ஒழுங்கு படுத்தப்பட்டு கிடைக்கும். அந்தந்த நிறுவன இணையதளத்திற்கு சென்று மெயில் பேக்-யில்  (Mail back section) உங்களுக்கு தேவையான தகவலை உறுதி செய்தால், செய்த மறுநிமிடத்திலோ அல்லது பெரும்பாலும் 24 மணி நேரத்துக்குள், இந்த தகவல் மின்னஞ்சலில் வரும்.

பரஸ்பரநிதியில் நமது யூனிட் விபரங்களை பராமரிக்கும் இரு முக்கிய நிறுவனங்கள், கேம்ஸ்  (Cams online) மற்றும் கார்வி (Karvy mfs)


இவர்களின் இணைய தளத்தில் இருந்து என்னென்ன தகவல்கள் பெறலாம் என்று அறிய அட்டவணை  பார்கவும்.

Mai back reports avaiabe in CAMS site - Table 1
Consolidated ActiveStatement
Consolidated Account Statement - CAMS+Karvy+FTAMIL+SBFS
Consolidated Portfolio Statement - Now with Dividend Payout Summary !!
Consolidated Transaction Details
Consolidated Realised Gains Statement
Single Folio Account Statement

காத்திருப்பது கஷ்டம் தான். எனவே தகவல் வருவதற்காக காத்திருக்காமல், அல்லது தகவல் கேட்டதையே மறந்து, கிடைத்த தகவலை உபயோக படுத்தாமல் இருப்பதை தவிர்க்க, தகவல் உடனுக்குடன் திரையில் தெரிந்தால் நல்லது தானே?? அதற்கும் வழி உள்ளது!! முன்னர் கூறியபடி இணைய இணைப்பில் பதிவு செய்து அந்த நுழைவுசீட்டை உபயோகப்படுத்தி பார்க்கும் போது தகவல்கள் திரையில் தெரியும். இதற்கு ஒவ்வொரு நிறுவனத்தின் இணையத்திற்கு நாம் சென்று பதிய வேண்டும். இதை தவிர்ப்பதற்கு ஒரே இடத்தில பதிந்து எல்லாவற்றையும் பார்க்கும் வசதியை பெற மேலே படியுங்கள்… அதற்கு முன் ஒரு முக்கிய பாதுகாப்பு அம்சம் குறித்த தகவல்: மெயில் பேக்  (Mail back report)  பெற நாம் இணையத்தில் பதிவு செய்ய வேண்டியதில்லை. அதற்குரிய பதிவு விவரங்களை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டியதில்லை. எனவே யார் வேண்டுமானாலும் உமது தகவலை பெற முடியும் என்று அஞ்ச வேண்டாம். முதலிலேயே பதியப்பட்ட உங்கள் மின்னஞ்சலுக்கு தான் தகவல் செல்லும்.

கடந்த கட்டுரைகளில் கணினி மற்றும் கைபேசி மூலம் மின்னணு முறையில் நிதி பரிமாற்றங்களை குறிப்பாக பரஸ்பர நிதி பரிமாற்றங்களை எவ்வாறு செய்யலாம் என்று பார்த்தோம். ஒரு திட்டம் ஒரு நிறுவனம் என்று ஆரம்ப கால முதலீட்டாளர்களுக்கு இது எளிய செயல் தான். ஆனால் பல நிறுவனங்களில் ஏகப்பட்ட திட்டங்கள் வைத்திருப்போர்களுக்கு இது கடினமான செயலாக இருக்கும். காரணம் யாதெனில் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனியாக உபோயகிப்பார் பெயர் (user name) கடவு சீட்டு (password) வைத்திருக்க வேண்டும். 7 - 8 நிறுவனம் என்று வரும்போது இதை நினைவில் கொள்வதே பிரம்மபிரயர்த்தனம் தான். ஒவ்வொரு முறையும்  யூனிட்டுகள் வாங்கும் போது இணையத்தில் வங்கி தளத்திற்கு சென்று பணத்தை நிதி நிறுவனத்திற்கு மாற்ற வேண்டும். இது எளிதாக இருந்தாலும் எல்லா முறையிலும் பணம் சரியாக நினைத்தபடி மாறும் என்று நிச்சயம் இல்லை. மாறாத தருணத்தில் அதற்குரிய மாற்று வேலையை செய்து பணம் பெறுவதும் கடினம் தான் (reversing the transfer). இவற்றை தவிர்த்து ஒரே இணைய தளத்தில் ஒரு user name மற்றும் ஒரு கடவு சீட்டு மூலம் எல்லா நிறுவனத்தின் எல்லா திட்டங்களை பார்க்கவும், வாங்கவும் , விற்கவும் முடியும் என்றால் மிக எளிது தானே. அதுவும் வங்கி தளத்திற்கு செல்லாமலேயே நமது கணக்கு கழிக்கப்பட்டு யூனிட் வாங்கப்படும் என்றால் ரொம்ப சவுரியம் தானே. வாழைப்பழத்தை திங்க கொடுத்து உரித்தும் கொடுத்தால் இனிமை தானே. இது எங்கே எங்கே என்கிறீர்களா? இதோ விவரம்

ஒற்றை அடையாளத்தில் நிதி விபரம்- மீயூச்சுவல் பண்ட் யுட்டீலீட்டீ (Single sign on – MF Utilites) உங்களது பரஸ்பர நிதி முதலீட்டில் எல்லா நிறுவனத்தில் உள்ள அணைத்து திட்டங்களின் விவரங்களை ஒரே இடத்தில பார்க்க உதவும் தளம் எம்.எப்.யூ (MFU) எனப்படும் மீயூச்சுவல் பண்ட் யுட்டீலீட்டீ (MF Utilities )என்கிற இணைய தளம் ஆகும். (https://www.mfuindia.com). இதை உபயோக படுத்துவதற்கு நாம் முதலில் நமது விவரங்களை கொடுத்து பதிய வேண்டும். பதிந்த உடன் அவர்கள் நமக்கு ஒரு குறியீடு எண் தருவார்கள் (CAN – Common Account Number). இந்த நம்பர் வைத்துக்கொண்டு எந்த நிறுவனத்தின் திட்டங்களையும் வாங்கவும் விற்கவும் இந்த தளத்தில் முடியும். நாம் முன்னரே வைத்துள்ள திட்டங்களின் விவரங்களையும் இந்த இணைய தளத்தில் ஒரே இடத்தில பார்க்க முடியும். இப்போது சொல்லுங்கள் இது மிக எளிய முறை தானே!!

மேலும் நன்கு புரிந்து கொள்ள தெளிவாக விளக்குகிறேன். இந்த CAN எண்னை பெறுவதால் 4 - 5 நிறுவனங்களில் உள்ள 7 - 8 திட்டங்களின் விவரங்களை ஒரே இடத்தில் பார்க்க முடிகிறது. உதாரணமாக, ஐ சி ஐ சி ஐ (ICICI) நிறுவனத்தின் வரி திட்டம் , (Reliance Growth திட்டம்) ரிலையன்ஸ் குரோத் திட்டம் , (Franklin Retirement)  பிராங்க்ளின் ரிட்டையர்மெண்ட் திட்டம் மற்றும் அவர்களின் பிராங்க்ளின் புளூசிப் திட்டம்  (Bluechip திட்டம்) ஆக மூன்று நிறுவனங்களின் நான்கு திட்டங்களையும் ஒரே இடத்தில பார்க்க முடிகிறது. இந்த வழி முறைகளை உபயோகப்படுத்தாத பட்சத்தில் இந்த மூன்று நிறுவனங்களுக்கும் தனி தனியாக இணைய இணைப்பு பெற வேண்டும். இது போக புதிதாக ஹச் டி எப் சி டாப் 200(HDFC Top 200) திட்டத்தை வாங்க வேண்டும் என்றாலும் (HDFC ) ஹச் டி எப் சி இணைத்தளத்திற்கு செல்லாமல் அல்லது (HDFC) ஹச் டி எப் சி க்கு உரிய காகித (form) படிவம் பூர்த்தி செய்யாமல் எம்.எப்.யூ  (MFU)  இணையத்தில் ஹச் டி எப் சி டாப் 200 (HDFC Top 200) திட்டத்தை வாங்க  முடியும். எனவே நாம் ஒவ்வொரு நிறுவனத்தின் இணையத்திற்கு சென்று வாங்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஒவ்வொரு நிறுவனத்தின் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்த எம் எப் யூ  (MFU) மூலம் எந்த நிறுவனத்தின் எந்த திட்டத்தையும் வாங்க, விற்க, மாற்ற (BUY, SELL, SWITCH) ஒழுங்கு படுத்தப்பட்ட ஒரு காகித விண்ணப்பத்தையோ அல்லது மின்னணு முறையில் இணையத்திலோ வாங்க முடியும். 

அடுத்ததாக மிக முக்கிய பலன் ஒன்று உள்ளது. நமது மின்னஞ்சல் முகவரி அல்லது கைபேசி எண் மாறுகின்ற போது ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தகவல் தந்து விவரங்களை மாற்றாமல் இந்த எம் எப் யூ (MFU)  இணையத்தில் தகவல்களை மாற்றினால் எல்லா நிறுவனத்திலும் நமது கணக்கில் அது மாற்றபட்டு விடும்.

என்ன வாசகர்களே, இந்த (MFU) முறையில் நிதி திட்டங்களை வாங்குவதும் விற்பதும் எளிதாக தானே இருக்கிறது? இதை உபயோகப்படுத்தி உங்களது முதலீட்டு திட்டங்களில் பரிமாற்றம் செய்வதையும், பராமரிப்பதையும் எளிதாக்குங்கள் . சந்தேகங்கள் இருந்தால் எழுதுங்கள்.

No comments:

Post a Comment