Monday 14 May 2018

மீயூச்சுவல் பண்ட் திட்டங்களில் மாற்றம்.. முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

My recent article on has been published in "Nanayam Vikatan". Click here to read the article directly from vikatan website. The same article is given below.

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கிறது செபி. ஒரே மாதிரியான பல ஃபண்ட் திட்டங்களை ஒன்றிணைக்கச் சொல்லியிருக்கிறது. சில ஃபண்ட் திட்டங்களின் பெயரும், சில ஃபண்ட் திட்டங்களில் முதலீட்டுக் கலவையும் (போர்ட் ஃபோலியோ) மாற்றப்பட்டிருக்கிறது. இன்னும் சில ஃபண்டுகளில் இந்த இரண்டுமே செய்யப்பட்டிருக்கிறது. இந்த மாற்றங்களைத் தொடர்ந்து மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம்.  செபி வழிகாட்டுதல்படி, ஃபண்ட் நிறுவனங்கள் செய்துள்ள மாற்றங்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். அதைப் பற்றி இனி பார்ப்போம்.  

பெயரிலும் தத்துவத்திலும் எந்த மாற்றமும் இல்லை:

முதலில் முதலீட்டு திட்டத்தின் பெயரில் எந்த மாற்றமும் இல்லை.  திட்டத்தின் அடிப்படை  முதலீட்டு  தத்துவத்திலும் எந்த மாற்றமும் இல்லை. இந்த வகையான பிரிவுகளில் தாங்கள் செய்ய வேண்டியது ஏதுமில்லை. இத்திட்டத்தில் தொடர்ந்து முதலீட்டை தொடரலாம்.

பெயரில் மாற்றம், தத்துவத்தில் மாற்றம் இல்லை:

திட்டத்தின் பெயரில் மாற்றம் வந்திருக்கிறது, அதன் தத்துவத்தில் பெரும் மாற்றம் இல்லை அல்லது சிறிய அளவில் முதலீட்டு தத்துவம்  மாறுகிறது. இது போன்ற நிறைய திட்டங்கள் புதிய நாம கிரகணங்களை சூட்டிக் கொண்டு உள்ளது. அதன் அடிப்படை தத்துவம் பெரிதாக மாறாத போதும் அது சிறிய அளவில் மாறியிருந்தாலும் அதே திட்டத்தில் முதலீட்டை தொடரலாம். 6  அல்லது 12 மாதங்களுக்கு பிறகு அதன் லாபமீட்டும் தன்மையை திரும்பவும் ஆராய்ந்து அதில் தொடர்வதை  உறுதிசெய்து கொள்ளலாம். லார்ஜ் கேப் ஃபண்ட் என்பது  லார்ஜ்  அண்டு மிட் கேப் ஃபண்ட் ஆக மாற்றம் கொள்ளும்போது பெரிதாக மாற்றங்கள் இல்லை. 

பெயரில் மாற்றம் இல்லை தத்துவத்தில் மாற்றம்: 

பெயரில் மாற்றங்களைப் பற்றி பெரிதாக நாம் கவலைப்பட வேண்டியதில்லை, அதேசமயம் ஃபண்ட் முதலீட்டு தத்துவங்களில் மாற்றம் வரும்போது அவசியம் புதிய மாற்றத்தை பற்றி ஆராய வேண்டும். அந்த புதிய மாற்றம் மேற்கூறியபடி சிறிய மாற்றங்களாக இருக்கும்பட்சத்தில் அதே பண்டில் தொடரலாம். மாற்றங்கள் பெரிதாக இருக்கும் பட்சத்தில் அந்தப் புதிய மாற்றம் நமது முதலீட்டிற்கு ஏற்றது என்றால் தொடரலாம் , ரிஸ்க் அதிகம் என்று என்னும்போது  அதிலிருந்து மாறிக் கொள்வது நல்லது. டைவர்ஸிபைடு ஃபண்ட் , செக்டரல்  ஃபண்ட்  ஆக பரிமாறும்போது அது அடிப்படைத் தத்துவத்தில் மாற்றம் அதிகம்  மற்றும் அதற்கு ரிஸ்க்கும் அதிகமாகின்றது.

பெயரிலும் மாற்றம் தத்துவத்திலும் மாற்றம்:

இரண்டிலும் மாற்றம் என்றால் திட்டம் நன்கு மாறிவிட்டது என்று அர்த்தம். இந்த வகையில் நாம் புதிய திட்டத்தின் தத்துவங்களை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். அது நமக்கு ஏற்றது என்றால் தொடரலாம் இல்லை எனில் திட்டத்தில் இருந்து விலகி கொள்வது நல்லது.

திட்ட  மாற்றத்தின் முக்கிய அம்சங்கள் 

  • நாம் இந்தத் திட்ட மாற்றத்தினால் குறிப்பிட்ட காலத்துக்குள் விலகி கொள்வதானால் அதற்கு எந்த எகஸிட் லொடும் (Exit Load)  கட்ட தேவையில்லை. எவ்வளவு காலம் என்பதை திட்டங்களுக்கு ஏற்றவாறு அதன் நிறுவனங்களும் ஒலையில் குறிப்பிட்டருக்கும்.
  • இந்த முறையில் திட்டங்கள் சேர்க்கப்படும் போது இதனால் முதலீட்டாளர்களுக்கு எந்த வகையான புதிய வரி செலுத்த வேண்டிய தேவை ஏற்படாது. இந்த திட்டங்கள் சேர்க்கப்படும் போது இது விற்ற வகையில் கனக்கில் வராது, அதே திட்டத்தை நாம் வைத்திருப்பது போன்று கணக்கிடப்படும்.


No comments:

Post a Comment